‘அமலாபால்’ வாய்பை தட்டிப்பறித்த ‘அதிதி ஷங்கர்’ – பிரம்மாண்ட இயக்குநர்தான் காரணமா?

photo

கோலிவுட்டில் புதுமுக நடிகையாக அறிமுகமாகி எக்கசக்கமான ரசிகர்களை பெற்றவர் நடிகை அதிதி ஷங்கர். பிரபல இயக்குநரான ஷங்கரின் மகளான இவர் தனது முதல் படத்திலேயே நடிகர் கார்த்தியின் ‘விருமன்’ படத்தில் நடித்து அசத்தினார். நடிப்பை கடந்து ஒரு பாடலும் பாடியுள்ளார். அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் நடித்தார். தற்போது இயக்குநர் விஷணுவர்தன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார். அதற்காக பேர்ச்சுகல் நாட்டிற்கு பறந்துள்ளார். மற்ற நடிகைகளை காட்டிலும் அறிமுகமான புதிதிலேயே முன்னணி நடிகர்களின் படங்கள் மற்றும் இடைவிடாமல் அடுத்தடுத்த பட வாய்ப்பு என அதிதி காட்டில் நல்ல மழை பெய்துவருவது மற்ற நடிகளுக்கு புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதே கருத்து சமூகவலைதளங்களிலும் பரவலாக காணமுடிகிறது.

photo

அதை நிரூபிக்கும் வகையில் தற்போது மீண்டும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதிதி, ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஷ்ணுவிஷால், ராம்குமார் கூட்டணியில் ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாகவும் அந்த படத்தில் அமலாபால் நடித்த கேரக்டரில் அவருக்கு பதிலாக நடிகை அதிதி நடிக்கபோவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு  இந்த ஆண்டு இறுதியில் துவங்க உள்ளதாம்.

Share this story