‘இராவண கோட்டம்’ படத்தின் ஸ்னீக் பீக் இதோ.

‘இராவண கோட்டம்’ படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரித்த நிலையில் தற்போது படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது.
2013 ஆம் ஆண்டு மதயானை கூட்டம் படத்தை இயக்கி வெற்றிகண்ட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் ‘இராவண கோட்டம்’ சாந்தனு, பிரபு, ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.
வரும் மே மாதம் 12ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள இந்த படத்தின் ஸ்னீக் பீக் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. சாந்தனுவும், ஆனந்தியும் ரொமான்ஸ் செய்யகூடிய அந்த காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. தொடர்ந்து இவை படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரித்துள்ளது. இந்த படம் காதல், நட்பு, குடும்பம், துரோகம் உள்ளிட்ட அனைத்தும் கலந்த கலவையாக சுகுமாரின் ஸ்டைலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாராகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கோலிவுட் சினிமாவில் பல வருடங்களாக தனக்கான இடத்தை பிடிக்க தொடர்ந்து உழைத்து வரும் ஷாந்தனுவுக்கு இந்த படம் நிச்சயமாக திருப்புமுனையாக அமையும் என்று பலரும் கூறிவருகின்றனர்.