டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிக்கும் ரவி மோகன்

jayam ravi

பிரபல நடிகர் ரவி மோகன் குடும்ப பிரச்சினைக்கு பிறகு ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும் .அது டபுள் ஹீரோ சப்ஜெக்டாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது .
பிரபல நடிகர் ரவி மோகன் ஜெயம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் .இப்படத்தை அவரின் சகோதரர் இயக்கினார் .அதன் பின்னர் அவர் பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார் ,இந்நிலையில் ரவி மோகன் ஒரு புதிய படத்தில் நடிகர் எஸ்ஜே சூர்யாவுடன் நடிக்க உள்ளார் 
'டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் யோகியின் இயக்கத்தில் நடிகர் ரவிமோகன் நடிக்க உள்ளார். இவர்களது கூட்டணியில உருவாகவுள்ள புதிய படத்தை பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜூலை அல்லது ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படமானது டபுள் ஹீரோ சப்ஜெக்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story