" ஊர் என்ன சொன்னால் எங்களுக்கென்ன?" மீண்டும் ஒன்றாக சுற்றும் ரவி மோகன் - கெனிஷா ஜோடி

ravi mohan

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி தன்னுடைய பெயரை ரவி மோகன் என்று மாற்றி கொண்டார் .இந்நிலையில் அவர் பெயரை மட்டும் மாற்ற வில்லை தன்னுடைய ஜோடியையும் மாற்றி விட்டார் .ஆம் அவர் தன்னுடைய மனைவி ஆர்த்தியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்று விட்டார் .அதன் பின்னர் அவர் கெனிஷா என்ற பாடகியுடன் நட்பு கொண்டார் .இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியது .
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கில் இருவரும் கருத்துகளையோ, அறிக்கைகளையோ வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

இந்நிலையில் சமீபத்தில்  சென்னையில் நடந்த ரூ.3 கோடி பரிசுக்கான சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி தொடர்பான நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டனர். ரவி மோகன் - 
கெனிஷா இருவரும் தனித்தனி காரில் வந்து இறங்கினாலும், நிகழ்ச்சியில் ஒன்றாகவே பேசி சிரித்து கொண்டிருந்தனர்.அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்த பின்னர் அங்கிருந்து தனித்தனி காரில் புறப்பட்டு சென்றனர். முன்னதாக ரவி மோகன் பேசும்போது,கிரிக்கெட் தொடர்பான தகவல்களை மட்டும் குறிப்பிட்டார். மற்ற கேள்விகளையும் தவிர்த்துவிட்டார். 

Share this story