"எனது வாழ்க்கையில் சுயமரியாதையை திரும்ப பெறுவதற்கு போராடினேன்".-எந்த ஹீரோ இப்படி பேசினார் தெரியுமா ?
1767659441000
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீ லீலா நடித்துள்ள ‘பராசக்தி’ என்ற படம், வரும் 10ம் தேதியன்று திரைக்கு வருகிறது. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். படம் குறித்து ரவி மோகன் கூறுகையில், ‘நான் படத்தை பார்த்து விட்டேன். இந்த ஆண்டின் மிகச்சிறந்த படமாக இது இருக்கும். சிவகார்த்திகேயன் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். அவர் இவ்வளவு பெரிய உயரத்துக்கு வந்திருக்கிறார் என்றால், அது சாதாரண விஷயம் இல்லை. அவரது ரசிகர்கள் அவருடனேயே இணைந்து ஓடிக்கொண்டு இருங்கள். 100வது படம் என்று நினைக்காதீர்கள் ஜி.வி.பி. இது தான் உங்கள் முதல் படம். இன்னும் கூட நீங்கள் 100 படங்களுக்கு மேல் இசை அமைக்க வேண்டும்.
இந்த படத்தில் ஒரு தீயை அழிக்க முயற்சி செய்கிறேன். அந்த தீயை வெளியிலுள்ள சிலர் அழிக்க பார்க்கின்றனர். இது சுயமரியாதையை காப்பாற்றுவது பற்றிய படம். எனது வாழ்க்கையில் சுயமரியாதையை திரும்ப பெறுவதற்கு போராடினேன். எனவே, ரசிகர்கள் சுயமரியாதையை மட்டும் விட்டுவிடாதீர்கள்’ என்றார்