உடல் எடையை குறைக்கும் ரவி மோகன்... எந்த படத்திற்காக தெரியுமா...?

நடிகர் ரவி மோகன், கராத்தே பாபு படத்திற்காக உடல் எடையை குறைக்கும் வகையில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ரவி மோகன். சமீப காலமாக இவரது விவாகரத்து பிரச்சனை இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரவி மோகன் சுதா கொங்கரா இயக்கும் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையே ரவி மோகன் அவரது 34-வது படமாக கராத்தே பாபு என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு, இயக்குவதாக போஸ்டரை பகிர்ந்து பட நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்து இருந்தது. ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
#RaviMohan undergoing heavy weight loss for his special Firey portion of #KaratheyBabu 🏋️♂️🔥
— AmuthaBharathi (@CinemaWithAB) May 23, 2025
He will be reducing around 12 Kgs for that particular portion👏 pic.twitter.com/vXTbZJcVoB
இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இந்தப் படத்தில் ரவி மோகன் அரசியல்வாதி மற்றும் கராத்தே மாஸ்டராகவும் நடித்துள்ளார். கராத்தே பாபு திரைப்படத்தில் நடிகர் சக்தி வாசுதேவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் கராத்தே பாபு திரைப்படத்திற்காக ரவி மோகன் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார். அதற்காக 12 கிலோ உடல் எடையை குறைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது