இயக்குனர் அவதாரம் எடுக்கும் ரவி மோகன்...?

ravi mohan

நடிகர் ரவி மோகன் இயக்குனராகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நடிகர் ரவி மோகன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவரது நடிப்பில் கடைசியாக காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியாகி ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதற்கிடையில் டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கராத்தே பாபு திரைப்படத்திலும் நடித்து வருகிறார் ரவி மோகன். மேலும் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ஜீனி போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

 ravi mohan

இந்த நிலையில் ரவி மோகன் இயக்குனராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இப்படத்தில் யோகி பாபு கதாநாயாகனாக நடிக்கவுள்ளதாகவும், இதன் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 


 

Share this story