ரவி மோகனின் 34 படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியீடு

கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் 'ஆர்.எம் 34' படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன் . இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான 'இறைவன், சைரன்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியானது 'காதலிக்க நேரமில்லை' திரைப்படம். இப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. சுதா கொங்கரா இயக்கும் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே ரவி மோகனின் 34-வது படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குவதாக போஸ்டரை பகிர்ந்து பட நிறுவனம் கடந்த அக்டோபரில் அறிவித்தது.
Something big coming up on the way📢
— Screen Scene (@Screensceneoffl) January 28, 2025
Watch out for @iam_RaviMohan's #RM34 Title Announcement Teaser releasing tomorrow at 11AM🔥
Directed by @ganeshkbabu
Produced by @Screensceneoffl #SundarArumugam
A @samcsmusic Musical#DaudeeJiwal #Shakkthivasu @ksravikumardir @actornasser… pic.twitter.com/2o3IHToIuV
ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் ரவி மோகனின் 34 படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோவை நாளை காலை 11 மணிக்கு படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் ரவி மோகன் ஒரு அரசியல்வாதியாகவும் கராத்தே மாஸ்டராகவும் நடித்துள்ளார் என தகவல் வெளியாகி வருகிறது.