மீண்டும் திரையில் ரவி மோகனின் M. Kumaran S/O Mahalakshmi திரைப்படம்...!
1741430632795

ரவி மோகனின் M. Kumaran S/O Mahalakshmi திரைப்படம் ரீ ரிலீசாகிறது.
2004 ஆம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், அசின் ,நதியா, பிரகாஷ் ராஜ் மற்றும் விவேக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது எம்.குமரன் Son Of Mahalakshmi திரைப்படம். இப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்தார், படத்தில் இடம் பெற்ற பாடலகள் அனைத்தும் ஹிட்டானது.
தாய்-மகன் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ரசிகர்கள் இடையே நாளல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் முடிவடைந்த நிலையில் திரைப்படத்தை மீண்டும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் மார்ச் 14 ஆம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்யப்படுக்குறது.