"தற்போது எனக்கு சுதந்திரம்,மரியாதை கிடைத்துள்ளது" -ரவி மோகன் பதிவு

jayam ravi
தமிழ் படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர், ரவி மோகன். சமீபகாலமாக அவரது விவாகரத்து சம்பவம் பேசுபொருளாக இருந்து வந்தது. கடந்த சில மாதங்களாக பல்வேறு சர்ச்சைகளிலும், பிரச்னைகளிலும் சிக்கி வந்த அவர், தற்போது அவற்றில் இருந்து மெதுவாக மீண்டு வருகிறார். நெருக்கடி இருந்தாலும் கூட, சினிமாவில் தனது வேகத்தை அவர் குறைக்கவில்லை. இதற்கிடையில் தனது தோழியும், பாடகியுமான கெனிஷா பிறந்தநாளை பாலி தீவில் கொண்டாடி மகிழ்ந்துள்ள ரவி மோகன், அந்த போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
அது இணையதளங்களில் வைரலாகி வந்த நிலையில், ரவி மோகன் வெளியிட்டுள்ள பதிவில், ‘பல வருடங்களாக சுதந்திரம், மரியாதை மற்றும் சின்னச்சின்ன சந்தோஷங்களை எதிர்பார்த்து பிரார்த்தனை செய்து வந்தேன். நான் எதிர்பார்த்தது தற்போது எனக்கு கிடைத்துள்ளது. இவை அனைத்தும் தங்கத்தை விட மதிப்பு மிகுந்தவை’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இதை அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Share this story