டைரக்டர் ,ப்ரொட்யூசர் ,நடிகர் என டீ.ராஜேந்தர் போல் மாறும் ரவிமோகன்

நடிகர் ரவிமோகன் குடும்ப பிரச்சினைக்கு பிறகு விரைவில் டைரக்டர் ,ப்ரொட்யூசர் ,நடிகர் என பல அவதாரம் எடுக்க இருக்கிறார்.
நடிகர் ஜெயம் ரவி ஜெயம் படத்தின் மூலம் நடிகராக மாறினார் .தனது சகோதரர் இயக்கத்தில் வந்த அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது .பின்னர் சந்தோஷ் சுப்பிரமணியம் ,தீபாவளி போன்ற வெற்றி படங்களில் நடித்தார் .இப்போது குடும்ப பிரச்சினையில் சிக்கியுள்ளார்
இதனால் நீதிமன்றத்தை நாடி இருக்கும் ரவி மோகன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்து வரும் போதிலும் புதிய தொடக்கங்களை ரவி தொடங்கி வருகிறார். அந்த வகையில் விரைவில் அவர் இயக்குனராக களமிறங்க இருக்கிறார். தனது முதல் படத்தை யோகி பாபுவை வைத்து இயக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
தொடர்ந்து தயாரிப்பாளராகவும் ரவி மோகன் அவதாரம் எடுத்துள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் தான் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் லோகோ மற்றும் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்கிற தனது பெயரிலேயே தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க உள்ளதாகவும், இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என அடுத்தக் கட்டத்தை நோக்கி செல்லும் ரவி மோகனின் புதிய பயணத்திற்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.அவரின் வெற்றிக்கு நாமும் வாழ்த்து சொல்வோம்