"சிவகார்த்திகேயன் அனைத்துக்கும் தகுதியானவர்" -ரவி மோகன் பேச்சு

jayam ravi
சுதா கொங்கரா இயக்கியுள்ள ‘பராசக்தி’ என்ற படத்தில், முதல்முறையாக வில்லனாக நடித்துள்ளார் ரவி மோகன். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசுவதற்கே கொஞ்சம் கூச்சமாக இருக்கும். ஆனால், எஸ்கே படத்தில் பேசுவது அப்படி இல்லை. பலரது கடின உழைப்பால் உருவாக்கப்பட்ட தங்கம்தான் ‘பராசக்தி’. இந்த வருடத்தின் மிகச்சிறந்த படமாக ‘பராசக்தி’ வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சிவகார்த்திகேயன் எதுவுமே இல்லாமல் இதுபோன்ற மேடைகளில் ஆரம்பித்து. தற்போது இந்த இடத்துக்கு வந்திருக்கிறார் என்றால், இவர் அனைத்துக்கும் தகுதியானவர். அவர் இன்னும் பெரிய மேடை ஏறி பேச வேண்டும்.
அதற்கு ரசிகர்கள் அவர் கூடவே இருக்க வேண்டும். பொதுவாக பல நல்ல ஆண்கள் இருக்கும் இடத்தில், ஒரு பெண் பாதுகாப்பாக உணர்வார் என்று சொல்வார்கள். ஆனால், முதல்முறையாக ஒரு பெண் (சுதா கொங்கரா) இருக்கும் இடத்தில் நான் பாதுகாப்பாக உணர்ந்தேன். எந்த தடைகள் வந்தாலும் தனி ஆளாக நின்று எதிர்கொள்வது என்பது, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க போகிறது

Share this story