‘பராசக்தி’ படத்தில் ரவி மோகன் பவர்ஃபுல் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார்"-சிவகார்த்திகேயன்
1767839449000
பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசுகையில், ‘இப்படத்தின் ‘பராசக்தி’ என்ற பெயரே அதிக வலிமை கொண்டது. படம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த 1960களுக்கு டைம் டிராவல் மூலம் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும்.
மாணவர்கள் அதிக சக்தி வாய்ந்தவர்கள். அவர்கள் எவ்வளவு வலிமை கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதை இப்படம் அழுத்தமாக சொல்கிறது. பலரது தியாகங்களை நேர்மறையாக, மரியாதையுடன் பதிவு செய்திருக்கிறோம். ‘கொட்டுக்காளி’ படத்தின் பிரீமியர் ஷோக்கு சுதா கொங்கரா வந்தார். அப்போது ஒரு காதல் கதை சொன்னார். அவர் சொன்ன ஒரு வரி என்னை வியக்க வைத்தது. பிறகு ஸ்கிரிப்ட்டை படிக்கச் சொன்னார். ‘இப்படத்தில் நடிக்கிறேன். இன்றிரவே ஸ்கிரிப்ட்டை படித்துவிடுவேன்’ என்று சொன்னேன். ஆனால், அது ஆங்கிலத்தில் இருப்பதை பார்த்து நடுங்கிய நான், மீண்டும் அவருக்கு போன் செய்து, இதற்கு அதிக நேரம் தேவைப்படும் என்றேன்.‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த்சாமி சக்தி வாய்ந்த வில்லனாக இருந்தது போல், ‘பராசக்தி’ படத்தில் ரவி மோகன் பவர்ஃபுல் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார்’ என்றார். இது ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் 100வது படமாகும்.