நடிகர் கிட்சா சுதீப்புக்கு சேது பட ரீமேக்கால் என்ன நடந்தது தெரியுமா ?

Kicha sudheep
நடிகர் கிச்சா சுதீப் தமிழ் தெலுங்கு ஹிந்தி என்று பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார் .இவர் தமிழில் நான் ஈ என்ற படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றி கொடுத்த்தார் .இந்நிலையில் அவருக்கு எப்படி கிச்சா சுதீப் என்று பெயர் வந்தது பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது .அது பற்றி நாம் இப்பதிவில் காணலாம் 
கிச்சா சுதீப்பின் உண்மையான பெயர் சுதீப் சஞ்சீவ். இவரது பெயருக்கு முன்னாள் கிச்சா என்ற பெயர் எப்படி வந்தது என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
கன்னட திரையுலகில் வாய்ப்புகளுக்காக போராடி வந்த சுதீப்புக்கு தமிழில் விக்ரம் நடித்த ‘சேது’ படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘சேது’ படத்தில் விக்ரமுக்கு ‘சீயான்’ என்கிற ஒரு அடைமொழியை வைத்து பின்னர் அதுவே அவரது ரசிகர்கள் அவரை அழைக்கும் பெயராக மாறியது. அதேபோல சுதீப்புக்கும் ‘சேது’ ரீமேக் படத்தில் ‘கிச்சா’ என்கிற பெயரை வைத்து, படம் வெளியான பிறகு ரசிகர்கள் அனைவரும் அவரை ‘கிச்சா’ என்கிற பெயரிலேயே அழைக்க ஆரம்பித்தனர். தன் முதல் பட வெற்றிக்கு காரணமான பெயர் என்பதால் சென்டிமெண்ட்டாக இருக்க வேண்டும் என தன்னுடைய பெயருடன் அதை இன்றுவரை சேர்த்து வைத்துள்ளார் கிச்சா சுதீப்.

Share this story