அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் ரிபெல்
1700129342149

பிரபல இசை அமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ், இசை மட்டுமன்றி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது, நாகேஸ்வர ராவ், கேப்டன் மில்லர், தங்கலான் உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். இதைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் நிக்கேஷ் இயக்கத்தில் ரெபெல் என்ற திரைப்படத்திலும் ஜி.வி.பிரகாஷ் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்ததாக, படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், ரிபெல் திரைப்படம் ஆக்ஷன் அதிரடியாக உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.