பிரபல தயாரிப்பாளர் கதாநாயகனாக நடிக்கும் 'அங்கீகாரம்'

rajesh

பிரபல தயாரிப்பாளர் ராஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும்  'அங்கீகாரம்'  படத்தின் 2வது போஸ்டர் வெளியாகி உள்ளது. 

தமிழில் நயன்தாராவின் அறம் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானர் கேஜே ராஜேஷ். கேஜேஆர் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தவர் ஹீரோ, டாக்டர், அயலான் உள்பட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இதில், ஹீரோ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால், டாக்டர், அயலான் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றது.


இந்த நிலையில், தயாரிப்பாளர் ராஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.  ஸ்வதிக் விஷன்ஸ் தயாரிக்கும் இந்த முதல் படத்திற்கு 'அங்கீகாரம்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஜே . பி. தென்பத்தியன் இயக்கவுள்ளார். விளையாட்டு சார்ந்த கோர்ட் ட்ராமா கதை களத்தில் படம் உருவாக்கி வருவதாக தெரிகிறது. 

Share this story