‘தலைவரு நிரந்தரம்…….’ - சாதனை படைக்கும் ‘ஜெயிலர்’.

ஒட்டு மொத்த தமிழகமே நாளைய தின ‘ஜெயிலர்’ பட வெளியீட்டிற்காக ஆவலாக காத்துள்ளனர். ரசிகர்களின் இந்த அதீத ஆரவத்தால் தமிழகத்தை கடந்து பல இடங்களில் வழக்கமாக ஒதுக்கப்படும் தியேட்டர்களை காட்டிலும் இம்முறை அதிகபடியான தியேர்ட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து முன்பதிவின் மூலமாகவும் வசூல் வேட்டையாடி வருகிறது ஜெயிலர்.
அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஜெயிலர் படத்திற்காக 1097 திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாம். இதற்கு முன்னர் கேஜிஎப் சாப்டர்2 படத்திற்கு 1037 திரைகள் மற்றும் அவதார்2 படத்திற்கு 1014 திரைகள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் பெங்களூருவில் காலை 6 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட உள்ளதால் தமிழகத்திலிருந்து பலர் அங்குசென்று படம் பார்க்க உள்ளனர். இது ஒரு புறம் இருக்க முன்பதிவின் மூலம் மட்டுமே பல கோடிகளை வசூலித்துள்ளது ஜெயிலர், தமிழகத்தில் முன்பதிவில் 8.5 கோடி வசூலித்துள்ளது. கர்நாடகாவில் 4.5 கோடியும், இந்திய அளவில் பார்த்தால் சுமார் 6 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டு 14 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அமெரிக்காவில் வசூல் 4.21 கோடியக உள்ளது. உலக அளவில் பார்த்தால் 20 கோடிவரை வசூல் கிடைத்துள்ளது. ப்ரீ புக்கிங்கே பலரை வாய்பிளக்க வைக்கும் நிலையில் தொடர்ந்து படம் வெளியாகி பாக்ஸ் ஆபீசில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.