வடிவேலுவை தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவுக்கு ரெட் கார்டா? வெளியான அதிர்ச்சி தகவல்.

photo

பிரபல காமெடிநடிகர் வடிவேலு தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சினிமாவில் நடிக்க ரெட் கார்டு கொடுக்கப்பட்டு, சில ஆண்டுகள் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். இதே போன்று பிரபல நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே சூர்யாவிற்கு ரெட் கார்டு கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

 வாலி, குஷி என எவர்கிரீன் ஹிட் படங்கள் மற்றும்  சில படங்களை கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே சூர்யா, தற்போது நடிகராக கலக்கி வருகிறார். அதிலும் வில்லன் கதாபாத்திரத்தில் இவர் கனகச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.  இப்படி பிசியான நடிகராக வலம் வரும் இவருக்கு ரெட்கார்டு கொடுத்து சினிமாவிலிருந்து ஓரம்கட்ட வேலை நடந்துப் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது எஸ்.ஜே.சூர்யா ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்காக கே..ஞானவேல் ராஜா தயாரிப்பில் நடிக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

photo

 ஆனால் சில பல காரணங்களால், அவரது படத்தில் நடிக்க முடியாமல் போக, வாங்கிய அட்வான்ஸை திரும்ப கொடுத்துள்ளர் எஸ்.ஜே. அதனை வாங்க மறுத்த ஞானவேல் ராஜா, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கூறியதாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில் பணத்தை திரும்ப தருமாறு ஞானவேல் கேட்க, நான் படத்திலேயே நடித்து கொடுக்கிறேன் ஆனால் எனது மார்கெட் இப்போது உயர்ந்துவிட்டதால் அதற்குதக்கவாரு ஊதியம் தரவேண்டும் என தடாலடியாக எஸ்.ஜே சூர்யா கூற, அதிர்ந்து போன ஞானவேல், அதெல்லாம் சரிபட்டு வராது என தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் கோடுத்துவிட்டாராம்.  இந்த புகாரால், எஸ். ஜே சூர்யாவிற்கு ரெட்கார்டு கொடுக்க அதிக வாய்ப்புள்ளதாக பேச்சு அடிபடுகிறது.  என்னதான் நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share this story