பின்வாங்கிய ரெட் ஜெயண்ட் நிறுவனம் – ‘லியோ’ படத்தை தமிழகத்தில் வெளியிடப்போவது யார்?

photo

விஜய், லோகேஷ் கூட்டணியில் தயாராகியுள்ள ‘லியோ’ படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. ரசிகர்கள் இதற்காக வெறித்தனமாக காத்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் ‘லியோ’ படத்தை வெளியிடும் போட்டியிலிருந்து ரெட் ஜெயண்ட் பின் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் புரொமோஷன் பணிகள் மற்றும் ரிலீஸ் பணிகள் அசுர வேகத்தில் நடந்து வருகிறது. அதன்படி, லியோ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல் பரவியது. அதேப்போல லியோ ஆடியோ லான்ச் நடக்காததற்கு காரணம் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் தான் என பரவலாக பேசப்பட்டுவந்தது. அதனாலேயே அந்நிறுவனம் இந்த போட்டியிலிருந்து பின் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை படத்தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் கையில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this story