'விடாமுயற்சி' பட உரிமையை தட்டித்தூக்கிய ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவனம்...!

vidaamuyarchi

`விடாமுயற்சி' படத்தின், தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. 

லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ், விஜே ரம்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் அடுத்த மாதம் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகிறது. அனிருத் இசையில் உருவான சவதீக்கா மற்றும் பத்திக்கிச்சு உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி யூடியூபில் டிரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில், விடாமுயற்சி படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தர் குறித்த அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.ak

 -தமிழ்நாட்டில் பெரிய படங்களை சமீப காலமாக ரெட் ஜெயன்ட் நிறுவனமும் அதை விட்டால் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தான் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக லைகா நிறுவனம் சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

Share this story