செம்மர கடத்தலை வைத்து உருவாகியுள்ள ‘ரெட் சாண்டல்’.. வெற்றி படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் !

RedSandalWood

வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெட் சாண்டல் வுட்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியாகியுள்ளது. 

‘கழுகு’ படத்தில் அசோசியேட்டாக பணியாற்றிய குரு ராமானுஜம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெட் சாண்டல்’. இந்த படத்தில் நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் கதாநாயகியாக தியா மயூரிகா நடித்திருக்கிறார்.  

RedSandalWood

இப்படத்தில் கே.ஜி.எஃப் படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜு நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்துள்ள இப்படத்திற்கு ராமலிங்கம் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். ஜெ.எம். சினிமாஸ் சார்பில் பார்த்தசாரதி தயாரிக்கும் இப்படம் கமர்ஷியல், சென்டிமென்ட் கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ளது. 

RedSandalWood

செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கள் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் முதல் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story