செம்மர கடத்தலில் மாட்டிக்கொள்ளும் அப்பாவி தமிழர்கள்... ‘ரெட் சாண்டல் வுட்’ டிரெய்லரை வெளியிட்ட வெற்றிமாறன் !

‘கழுகு’ படத்தில் அசோசியேட்டாக பணியாற்றிய குரு ராமானுஜம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெட் சாண்டல் வுட்’. இந்த படத்தில் நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தியா மயூரிகா நடித்துள்ளார். வில்லனாக கே.ஜி.எஃப் படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜு நடித்துள்ளார்.
முக்கிய கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்துள்ள இப்படத்திற்கு ராமலிங்கம் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். ஜெ.எம். சினிமாஸ் சார்பில் பார்த்தசாரதி தயாரித்துள்ள இந்த படத்தில் கமர்ஷியல், சென்டிமென்ட் கலந்த திரில்லர் இருக்கும். செம்மரக் கடத்தலில் ஈடுபடும் அப்பாவி தமிழர்கள் குறித்து பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இறுதிக்கட்ட பணிகளில் உள்ள இப்படம் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.