‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ அப்டேட்- கெத்து காட்டும் உதயநிதி.

photo

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளனர்.

photo

2014ஆம் ஆண்டு சித்தார்த், பாபி சிம்ஹா, லெட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘ஜிகர்தண்டா’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் பட்டையை கிளப்பியது. குறிப்பாக அந்த படத்தில் நடித்ததற்காக பாபி சிம்ஹாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது. இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்த படத்தையும் முதல் பாகத்தின் இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்கியுள்ளார். எஸ். ஜெ சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

photo

வரும் தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் தற்போதைய அப்டேட்டாக படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநியதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு அறிவித்துள்ளனர்.

Share this story