ரெஜினா நடித்துள்ள ‘சூர்ப்பணகை’... ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள ரெஜினா,‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திற்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் உருவாகியுள்ள திரைப்படம் 'சூர்ப்பணகை'. ‘திருடன் போலீஸ்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற கார்த்திக் ராஜூ இப்படத்தை இயக்கியுள்ளார்.
ரெஜினா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் கிஷோர், அக்ஷரா கௌடா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்துக்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் இப்படம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.