அர்ஜூன் தாஸ் நடித்துள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் படம்,-என்ன டைட்டில் தெரியுமா ?
காவல்துறை அதிகாரியாக அர்ஜூன் தாஸ் நடித்துள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் படம், ‘ஜான் டோ’. இது வரும் 13ம் தேதி வெளியாகிறது. முக்கிய வேடங்களில் சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் நடித்துள்ளனர். மதுமிதா, நிக்கோலஸ் செவாலியர் இணைந்து கதை, திரைக்கதை எழுதியுள்ளனர். ‘பாகுபலி’ போன்ற படங்களை தயாரித்த அர்கா மீடியா ஒர்க்ஸ் சார்பில் ஷோபு யார்லகட்ட, பிரசாத் தேவினேனி இணைந்து தயாரித்துள்ளனர்.
மதுமிதா இயக்க, பிரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். முஜீப் மஜீத் இசை அமைக்க, ஆர்டிஸ்ட் 404 குழு கூடுதல் இசைப் பணியை மேற்கொண்டுள்ளது. விஜய் வெங்கடரமணன் எடிட்டிங் செய்ய, தயாரிப்பு வடிவமைப்பு பொறுப்பை அஷ்வினி காலே ஏற்றுள்ளார். ஜான் டோ என்பவர் யார்? பாதிக்கப்பட்டவரா, கொலைகாரனா, காணாமல் போன குழந்தையா என்பதை மையப்படுத்தி கதை நகர்கிறது. ரசிகர்களால் எளிதில் யூகிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

