மீண்டும் "ஆசை" தலைப்பில் புதிய படம் -எந்த படத்தின் ரீமேக் தெரியுமா ?
1768959041000
கதிர் நடித்துள்ள ‘ஆசை’ என்ற படம், வரும் மார்ச் 6ம் தேதி ரிலீசாகிறது. ஷிவ்மோஹா இயக்கத்தில் கதிர், திவ்யபாரதி, பூர்ணா நடித்துள்ள இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. கடந்த 2019ல் மலையாளத்தில் வெளியான ஹிட் படம், ’இஷ்க்’. அனுராஜ் மனோகர் இயக்கத்தில் ஷான் நிகம், அன்ஷீத்தல் நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதன் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்தான் ‘ஆசை’ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. பாபு குமார் ஒளிப் பதிவு செய்ய, ரேவா இசை அமைத்துள்ளார். 1995ல் வசந்த் இயக் கத்தில் அஜித் குமார், சுவலட்சுமி நடிப்பில் வெளியான ‘ஆசை’ என்ற படத்துக்கும், இந்த ‘ஆசை’ படத்துக்கும் டைட்டிலை தவிர வேறெந்த சம்பந்தமும் இல்லை

