“ஓய் செல்ஃபி…..எனக்கு எப்போ ஒகே சொல்லுவ?”- 7 ஆண்டுகளை நிறைவு செய்த ‘ரெமோ’.

photo

சிவகார்த்திக்கேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘ரெமோ’. இந்த படம் வெளியாகி இன்றோடு 7ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

photo

கடந்த 2016ஆம் ஆண்டு பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன், கீர்த்தி சுரேஷ், சரண்யா பொண்வண்ணன், யோகிபாபு, சதீஷ் என பலரது நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் ரெமோ. கதாநாயகியை காதலிப்பதற்காகவே பெண் போல வேடமணிந்து அவருடன் வேலைப்பார்த்து, பல கஷ்டங்களை கடந்து அவரை ஒகே சொல்ல வைப்பதுதான் மைய்ய கதை. இந்தக்கதையில் காதல், ரொமான்ஸ், காமெடி என அனைத்தும் கலந்த கலவையாக பக்கா எண்டர்டெயினராக வெளியான இந்த படம் சிவகார்த்திக்கேயனின் சினிமா வாழ்வில் முக்கிய படமாக அமைந்தது.

photo

படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட், அனிருத் மிகச்சிறப்பாக தனது மேஜிக்கை செய்திருப்பார் . அதிலும் குறிப்பாக ஹீரோ ஹீரோயினுக்கு புரொப்போஸ் செய்யும் காட்சி பலரது ஃபேவரைட். சிவகார்த்திக்கேயன்- கீர்த்தி ஜோடி திரையில் அவ்வளவு பொருத்தமாக இருந்தது.

Share this story