ரஜினி, விஜய் உள்ளிட்ட பிரபலங்களின் ப்ளூ டிக் நீக்கம்.. அதிரடி காட்டும் எலான் மஸ்க் !

rajini and vijay

ரஜினி, விஜய் உள்ளிட்ட பிரபலங்களின் ப்ளூ டிக்கை நீக்கி ட்விட்டர் நிறுவனம் அதிரடி காட்டியுள்ளது. 

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். அதன்பிறகு ட்விட்டர் பல்வேறு மாறுதல்களை செய்து வருகிறார். ஏற்கனவே அந்த நிறுவனத்தில் இருந்து தொழிலாளர்களை அதிரடியாக நீக்கினார். இதையடுத்து அதிக பாலோயர்கள் உள்ள பிரபலங்களுக்கு அதிகாரப்பூர்வ கணக்கு என்று காண்பிக்கும் வகையில் ப்ளூ டிக் கொடுக்கப்பட்டு வந்தது. 

rajini and vijay

ஆனால் இந்த ப்ளூ டிக்கை பெற இனி மாத சந்தா செலுத்தவேண்டும் என்று எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்திருந்தார். இதற்காக இந்த மாதம் ஏப்ரல் வரை அவகாசத்தை ட்விட்டர் நிறுவனம் கொடுத்தது. இந்நிலையில் இந்தியாவில் சந்தா செலுத்ததாக பல பிரபலங்களின் ப்ளூ டிக்கை அந்நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது. 

rajini and vijay

அதன்படி தமிழகத்தில் உள்ள சினிமா பிரபலங்களான நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி, இயக்குனர்கள் ஷங்கர், லோகேஷ் கனகராஜ், அட்லீ, செல்வராகவன் உள்ளிட்டோரின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கான ப்ளூ டிக்கை நீக்கியுள்ளது. அதேநேரம் கமல், சூர்யா உள்ளிட்டோர் சந்தா கட்டியுள்ளதால் அவர்களது ப்ளூ டிக் நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோன்று பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக்கான் உள்ளிட்டோரின் ப்ளூ டிக்கையும் அந்நிறுவனம் நீக்கியுள்ளது. இதுதவிர கிரிக்கெட் பிரபலங்களான மகேந்திர சிங் தோனி, ரோகித் சர்மா, வீராத் கோலி உள்ளிட்டோரின் கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Share this story