தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் வில்லனாக பஹத் நடிப்பதாக தகவல்

தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் வில்லனாக பஹத் நடிப்பதாக தகவல்

தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் மலையாள பிரபலம் பஹத் பாசில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் வில்லனாக பஹத் நடிப்பதாக தகவல்

கடந்த 2015-ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் தனி ஒருவன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் வாரிக் குவித்தது. இப்படத்தில் வில்லனாக மிரட்டி இருந்த அரவிந்த் சுவாமியின் சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் 7 ஆண்டுகள் கழித்து தனி ஒருவன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதோடு சேர்ந்து வெளியான வீடியோ, சமூக வலைதளங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிர வைத்தது. முதல் பாகத்தில் நடித்த நயன்தாராவே இரண்டாம் பாகத்திலும் நாயகியாக நடிக்கிறார். இதனிடையே, வில்லன் வேடத்தில் நடிக்கப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், வில்லனாக நடிகர் பகத் பாஸில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் வில்லனாக பஹத் நடிப்பதாக தகவல்

தனி ஒருவன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ள நிலையில், நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் விரைவில் வௌியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Share this story