3 திரைப்படம் மறுவெளியீடு... ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த படக்குழு...

3 திரைப்படம் மறுவெளியீடு... ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த படக்குழு...

கடந்த 2012ம் ஆண்டு வெளியான திரைப்படம் 3. இப்படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்திருந்தனர். மேலும், சிவகார்த்திகேயன், சுந்தர் ராமு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். 11 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படம் திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட்டது. இந்தப் படத்திற்கு முதல் முறை கிடைந்த வரவேற்பை போலவே மீண்டும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. திரையரங்குகளில் 3 திரை்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதனால் படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து படத்தில் நாயகனாக நடித்திருந்த தனுஷ் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதேபோல, படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சுந்தர் ராமுவும் படம் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

Share this story