'ரெட்ரோ' படத்தின் 2வது BTS 'அகல் விளக்கும் அற்புதமும்' எபிசோட்டை வெளியிட்ட படக்குழு..!

retro

சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஒரு காதல் திரைப்படம் அதில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறினார். திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். இந்நிலையில் ரெட்ரோ படம் மே 1 வெளியாகவுள்ளது. படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் பெற்றுள்ளது. படத்தின் முதல் பாடலான கண்ணாடி பூவே பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.



படத்தின் படப்பிடிப்பு காட்சியை படக்குழு காமிக் வடிவத்தில் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்து
இருந்த நிலையில் அதன் முதல் எபிசோடை கடந்த வாரம் வெளியிட்டனர். அதை தொடர்ந்து தற்பொழுது காமிக்கின் இரண்டாம் எபிசோடை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

 

Share this story