'ரெட்ரோ' படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்...!
Tue Apr 08 2025 1:38:13 PM

நடிகர் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சூர்யா நடிக்கும் 44-வது திரைப்படம் 'ரெட்ரோ.' இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.
இதைத்தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைப்பெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே வெளியான கண்ணாடி பூவே மற்றும் கனிமா பாடலகள் மிகவும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.