உலகளவில் ரூ.100 கோடி வசூலை கடந்த ‘ரெட்ரோ’.. அதிகாரபூர்வ அறிவிப்பு...!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் கடந்த மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச், சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் பாடல்கள் திரையரங்குகளில் தெறிக்க விடுகின்றன.
A ‘ONE’ hundred crore LOVE at the Box Office for #TheOne's show💥
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) May 6, 2025
Book your tickets for #Retro Experience
🔗 https://t.co/zLoKNZJF7N #TheOneWon #RetroRunningSuccessfully #LoveLaughterWar@Suriya_Offl #Jyotika @karthiksubbaraj @hegdepooja @Music_Santhosh @prakashraaj… pic.twitter.com/nvkrEm4SJC
இந்நிலையில் இந்தப்படம் வெளியாகி 6 நாட்களை எட்டியிருக்கும் நிலையில், உலகம் முழுவதும் ரூ.104 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் பட்ஜெட் ரூ.60 கோடி என கூறப்படுகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து அவர் ‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.