ரெட்ரோ படத்தின் 'கனிமா' பாடல் ப்ரோமோ வெளியீடு

சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தில் இடம்பெற்றுள்ள 'கனிமா' பாடலின் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட்ரோ’. 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து இதனை தயாரித்துள்ளது. தற்போது இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
Get, Set, Kuthu 💿#Kanimaa from #Retro ❤️
— karthik subbaraj (@karthiksubbaraj) March 20, 2025
A @Music_Santhosh 🔥🔥
Releasing tomorrow, at 5PM.#RetroFromMay1 #LoveLaughterWar pic.twitter.com/PutnN6jCEg
மே 1-ம் தேதி வெளியாகவுள்ள ‘ரெட்ரோ’ படத்தின் டீஸர் மற்றும் கண்ணாடி பூவே என்ற பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், நேற்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பிறந்தநாளை முன்னட்டு 'கனிமா' என தொடங்கும் 2 வது பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அந்த பாடலின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், திருமண விழாவில் வரும் பாடல் போல் அமைந்துள்ளது. மேலும் ரஜினிகாந்த் ரெபரன்ஸ் வைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.