ரெட்ரோ படத்தின் `The One' பாடல் வெளியீடு...!

நடிகர் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் `The One' பாடல் வெளியாகி உள்ளது.
நடிகர் சூர்யா நடிக்கும் 44-வது திரைப்படம் 'ரெட்ரோ.' இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் கண்ணாடி பூவே மற்றும் கனிமா பாடல்கள் மிகவும் வைரலான நிலையில், இப்படத்தின் அடுத்த பாடலான தி ஒன் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
Here’s #TheOneSong https://t.co/5Hx6UC4api
— Suriya Sivakumar (@Suriya_offl) April 12, 2025
A @Music_Santhosh Musical
ft. @sidsriram @shanvdp #SaNa @Lyricist_Vivek Backing vocals by #Mahalakshmi #Victor@tseriessouth #LoveLaughterWar #RetroFromMay1 pic.twitter.com/Cs77Ykzd6i
இப்பாடலை விவேக் வரிகளில் சித்ஸ்ரீராம் மற்றும் ராப் பகுதியை SVDP பாடியுள்ளார்.இப்பாடல் மிகவும் உத்வேகத்துடன் அமைந்துள்ளது.பாடலின் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.ரெட்ரோ படத்திற்கான டப்பிங் பணிகளை சூர்யா முழுவதுமாக முடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி சென்னையில் நடைப்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.