’கனிமா’ பாடலின் புதிய வெர்ஷனை வெளியிட்ட ’ரெட்ரோ’ படக்குழு!

kanima

கார்த்திக் சுப்பராஜ் - சூர்யா கூட்டணியில் வெளியாகி உள்ள ’ரெட்ரோ’ திரைப்படத்தின் ’கனிமா’ பாடல் ரசிகர்களிடையே வைரலாகியுள்ள நிலையில் அதன் மற்றோரு வெர்ஷனை படக்கூழுவினர் வெளியிட்டுள்ளனர்.


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ’ரெட்ரோ’ திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.அதிலும் ’கனிமா’ பாடல் இணையத்தில் ரசிகர்களால் பெரியளவில் வைரல் செய்யப்பட்டது. இன்றளவும் ’கனிமா’ பாடலுக்கு பலரும் ஆடிப்பாடி கொண்டாடி வருகின்றனர். ஆனால் ரெட்ரோ திரைப்படத்தில் கனிமா முழுவதுமாக இடம்பெறாமல் பாடலுக்கு நடுவே சண்டை, வசன காட்சிகள் என இருப்பது ரசிகர்களுக்க் வருத்தத்தை கொடுத்துள்ளது.இதனிடையே ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் கனிமா பாடலின் உருவாக்கம் குறித்து கார்த்திக் சுப்புராஜ், சூர்யா, சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பேசியிருந்தனர். முதன்முதலில் இந்த பாடலை பதிவு செய்தபோது ‘கனிமா’ என்ற வார்த்தையே இல்லை எனவும் பாடலின் படப்பிடிப்பிற்கு பின்பே கனிமா என்ற வார்த்தையை வைத்து இப்பாடலை உருவாக்கியதாக அந்த உரையாடலில் பேசியிருந்தார் சந்தோஷ் நாரயணன்.

மேலும் அந்த உரையாடலில் கனிமா என்ற வார்த்தை இல்லாத முந்தைய வெர்ஷன் நன்றாக இல்லை, மொக்கையாக இருந்தது என கலகலப்பாக கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து கனிமா பாடலின் முந்தைய வெர்ஷனை இணையத்தில் வெளியிடுவது குறித்தும் மூவரும் பேசினர்.

 



அவர்கள் பேசியபடியே சந்தோஷ் நாரயணன் தனது எக்ஸ் பக்கத்தில் கனிமா மாற்று பாடலை வெளியிடுவதற்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜிடம் நகைச்சுவையாக அனுமதி கேட்டிருந்தார். அதன்படி கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கனிமா பாடலின் மற்றொரு வெர்ஷனை வெளியிட்டுள்ளார். இரண்டு நிமிடம் இருக்கக்கூடிய இந்த வீடியோவில் திருமண வீட்டில் சூர்யா, பூஜா ஹெக்டே,ச ந்தோஷ் நாரயணன் ஆகியோர் ஆடுகிறார்கள்.’சிட்டு சொன்ன சொல்லுக்கட்டு’ என்ற வரிகள் இந்த பாடலில் இடம்பெற்றுள்ளன. கனிமா என்ற வார்த்தை இடம்பெறவில்லை. இந்த பாடலும் சிறப்பாகவே இருப்பதாக இணையத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share this story