10 மில்லியன் பார்வைகளை கடந்த 'ரெட்ரோ' பட டிரெய்லர்...!

சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் டிரெய்லர் இணையத்தில் 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
நடிகர் சூர்யா அவரது 44- வது திரைப்படமாக ரெட்ரோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.
The Love for #RetroTrailer Has been Amazing. Thank you all ! 🤗
— karthik subbaraj (@karthiksubbaraj) April 20, 2025
Tamil - https://t.co/8FVGuCUdiW
Telugu - https://t.co/U2qSUDgVj2
Hindi - https://t.co/7ikqPZrvVg#TheOne From May One ! #Retro #LoveLaughterWar #RetroFromMay1 pic.twitter.com/DQRZ78BxTd
திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளனர்.படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அண்மையில் ரெட்ரோ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், இணையத்தில் 10 மில்லியன் பார்வைகளை கடந்து டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் டிரெய்லரை பிரபல மலையாள இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.