25 மில்லியன் பார்வைகளை கடந்த ரெட்ரோ படத்தின் 'கண்ணாடி பூவே...' பாடல்!

retro

சூர்யாவின் ரெட்ரோ படத்திலிருந்து கண்ணாடிப் பூவே பாடல் இணையத்தில் 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.  

கங்குவா படத்திற்கு பிறகு சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதனை சூர்யா – ஜோதிகாவின் 2D நிறுவனமும், கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசை அமைக்க ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.


காதல் கலந்த கேங்ஸ்டர் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.  இந்த திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தில் இருந்து கண்ணாடி பூவே மற்றும் கனிமா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கண்ணாடி பூவே பாடல் இணையத்தில் 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. .  

Share this story