"ரெட்ட தல"யில் அருண் விஜயுடன் நடித்தது குறித்து ஹீரோயின் என்ன சொன்னார் தெரியுமா ?

retta thala
இரட்டை வேடங்களில் அருண் விஜய் நடித்துள்ள படம், ‘ரெட்ட தல’. தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி ஹீரோயின்களாக நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். வரும் 25ம் தேதி படம் திரைக்கு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இந்நிலையில் சித்தி இத்னானி அளித்த பேட்டியில், தனது கேரியர் பற்றி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், ‘எனது முதல் தமிழ் படத்துக்குப் பிறகு நான் அலட்சியமாக இருந்துவிட்டேன். அப்போது அனைத்தையும் சுலபமாக செய்துவிடலாம் என்ற மனநிலை இருந்தது.
ஆனால், காலப்போக்கில் ஒரு கலைஞனை முன்னேறச் செய்வது அவனுக்குள் இருக்கும் பசியே என்பது புரிந்தது. ஒரு நடிகையாக நடனம் மற்றும் காதல் காட்சிகளில் தோன்றி மறைந்துவிட நான் விரும்பவில்லை. ஒரு அர்த்தமுள்ள கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். இப்படத்தில் எனக்கு ஒரு வலிமையான மற்றும் முக்கியமான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை அளித்த படக்குழுவுக்கு நன்றி’ என்றார். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர், சித்தி இத்னானி

Share this story