சிறப்பு போஸ்டர் வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த 'ரெட்ட தல' படக்குழு
1735730128000
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜயின் ‘ரெட்ட தல' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அருண் விஜயின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகளை கையாளுகின்றனர்.
பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புத்தாண்டை ஒட்டி சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரெட்ட தல படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
Happy New Year 2025! 🔥 From the world of #RettaThala – a power-packed action blockbuster, delivering double the action this year!@arunvijayno1 ' s #RettaThala
— Future Filmss (@FutureFilmss) January 1, 2025
Produced By- @BTGUniversal@bbobby
BTG Head of Strategy- @ManojBeno
Directed By-#KrisThirukumaran @SiddhiIdnani pic.twitter.com/NMFz0edxCP