மீண்டும் இணையும் “விக்ரம், ஐஸ்வர்யா ராய்” – இயக்குநர் யார் தெரியுமா!

photo

கோலிவுட்டில் எத்தனையோ படங்களில் எத்தனையோ ஜோடிகள் வந்தாலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடிகள் சிலர்தான் இருப்பார்கள் அந்த லிஸ்டில் கண்டிப்பாக விக்ரம்- ஐஸ்வர்யா ராய்க்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. இவர்கள் திரையில் வந்து செய்யும் மாயம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துவிடுகிறது. அப்படி ஒரு மாயம் மீண்டும் நிகழ போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

photo

முதலில்  மணிரத்தினம் இயக்கிய ராவணன் படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்தனர் விக்ரம்-ஐஸ்வர்யா ராய். அந்த படத்தில் காட்சிக்கு காட்சி நடிப்பு வசனம் என அனைத்திலும் சிறப்பான பங்களிப்பை வழங்கி ஸ்கோர் செய்தனர். இரண்டாவதாக  ஆதித்ய கரிகாலன், நந்தினியாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தனர். தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்தை மணிரத்தினம்தான் இயக்கபோகிறாராம். லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளனர். கமல்ஹாசனின் 234வது படத்தை தொடங்கியுள்ள மணிரத்தினம் அந்த படத்தை முடித்து விட்டு இவர்களை இயக்குவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

Share this story