விவாகரத்தின் விளைவை சொல்லும் "ஆண் பாவம் பொல்லாதது" -பட விமர்சனம்

rio
ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியாகியுள்ள ஆண் பாவம் பொல்லாதது படத்தின் விமர்சனம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம் 
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் இருவரும் தங்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்த பிறகு காதலிக்கின்றனர். சில நாட்களிலேயே மனைவியின் முற்போக்கான அணுகுமுறைகளை புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும் ரியோ ராஜ் அதையெல்லாம் தட்டிக்கேட்கிறார். இதனால் எழும் ஈகோ மோதல், அவர்களை விவாகரத்து வரை கொண்டு செல்கிறது. இதன் விளைவை சொல்கிறது படம்.
முழுநீள பேமிலி சென்டிமெண்ட் படத்துக்கு ஏற்ப ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் ஜோடியின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. மனைவிக்காக உருகுவது, ஈகோ யுத்தத்தில் வெடிப்பது, விவாகரத்துக்கு சம்மதிப்பது என்று, தனக்கான களத்தில் ரியோ ராஜ் புகுந்து விளையாடியுள்ளார். ‘ஜூனியர் சாய் பல்லவி’ என்று சொல்லும் அளவுக்கு மாளவிகா மனோஜ் சிறப்பாக நடித்துள்ளார்.
கணவன், மனைவியின் ஈகோ மோதலை பேலன்ஸ் செய்து, பொய் சொல்லியே வழக்கில் ஜெயித்துவிட வேண்டும் என்று கோர்ட்டில் மோதும் முன்னாள் தம்பதிகள் ஆர்ஜே விக்னேஷ்காந்த், ஷீலா ஜோடி கவனத்தை ஈர்க்கிறது.

Share this story