ஆண் பாவம் பொல்லாதது பட வெற்றிக்கு பிறகு -ரியோ நடிக்கும் புது படம் .

rio
சமீபத்தில் ரிலீஸ் ஆன ஆண் பாவம் பொல்லாதது படத்திற்கு பிறகு நடிகர் ரியோ புது படமொன்றில் நடிக்கிறார் .அந்த படம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம் 
டிரைடன்ட் ஆர்ட்ஸ், ஐவா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஆர்.ரவீந்திரன், சுதர்சன் இணைந்து தயாரிக்கும் புதிய ரொமான்டிக் காமெடி படம், ‘ராம் இன் லீலா’. சென்னையில் நடந்த இப்படத்தின் தொடக்க விழா பூஜையில் விஜய் சேதுபதி உள்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர். ராமச்சந்திரன் கண்ணன் எழுதி இயக்குகிறார்.
ரியோ, வர்திகா, நயனா எல்சா, மா.கா.பா.ஆனந்த், சேத்தன், முனீஷ்காந்த், மாளவிகா அவினாஷ், தீபா வெங்கட், சூப்பர் சுப்பராயன் நடிக்கின்றனர். மல்லிகார்ஜூன் ஒளிப்பதிவு செய்ய, அங்கித் மேனன் இசை அமைக்கிறார். சஞ்சய் விஜய்ராகவன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தில் இருந்து ‘ரியோ ராஜ்’ தனது பெயரை ‘ரியோ’ என்று மாற்றியுள்ளார்.

Share this story