ரியோ நடிக்கும் `ஆண் பாவம் பொல்லாதது' படத்தின் அப்டேட் நாளை வெளியீடு...

ரியோ நடிக்கும் `ஆண் பாவம் பொல்லாதது' படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்து ஜோ திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதைத்தொடர்ந்து ஜோ பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கவுள்ளார்.
இச்சமூதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இது இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார். இயக்குநர்கள் ஹரி, முத்தையா ஆகியோரை வைத்து, பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த "ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ்" நிறுவனம் சார்பாக, இந்த படம் உருவாகிறது.
Why Aanpaavam? The truth reveals tomorrow at 5.06 PM. Stay tuned!#AanPaavamPollathathu#APP @rio_raj @imalavikamanoj@DrumsticksProd @blacksheepoffl @kalaiyinkural @RjVigneshkanth @Music_Siddhu @ertviji @sheelaActress @dhivakargj @madheshmanickam @saregamasouth @Actor_KG https://t.co/qDfQ3R3BSS
— Rio raj (@rio_raj) May 2, 2025
இந்த திரைப்படத்திற்கு ஆண் பாவம் பொல்லாதது என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. தற்போது `ஆண் பாவம் பொல்லாதது' படத்தின் அப்டேட் நாளை மாலை 5.06 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.