காமெடியில் மிரட்டும் ‘ரிப்பப்பரி’... ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு !
மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரிப்பப்பரி’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது.
‘மாஸ்டர்’ மகேந்திரனின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரிப்பப்பரி’ இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஏகே என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதாநாயகியாக சீரியல் நடிகை காவ்யா மாதவன் நடித்துள்ளார். இவர்களுடன் நோபல் கே ஜேம்ஸ், மாரி, சீனி, ஆராத்தி போடி, தனம் செல்லா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் திவாகரா தியாகராஜான் இசையமைப்பாளராகவும், ஸ்ரீகிருஷ் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர். இந்த படத்தை ஏகே டால்லஸ்ட் மேன் நிறுவனம் சார்பில் அருண் கார்த்திக் தயாரித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஹாரர் காமெடியில் உருவாகியுள்ள இந்த காட்சி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.