மாறுபட்ட கதைக்களத்தில் ‘ரிப்பப்பரி’ – வெளியானது எதிர்பார்பை எகிறவைக்கும் டிரைலர்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். தொடர்ந்து விஜய்-லோகேஷ் கூட்டணியில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியாக வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்து ‘மாஸ்டர் மகேந்திரன்’ என அழைக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் இவர் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘ரிப்பப்பரி’. ஏகே தி டால்ஸ்மேன் நிறுவனம் சார்பில் நா.அருண் கார்த்திக் தயாரித்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் மாறுபட்ட கதைக்களத்தில் நடித்துள்ளார்.
படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர், டீசர் வெளியாக கவனம் ஈர்த்த நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கிராம பின்னணியில் யூடுயூப் குக்கிங் சேனல் நடத்தி வரும் மூன்று இளைஞர்களின் வாழ்வில் ஏற்படும் சம்பவங்களை திகில் கலந்த காமெடி கதையாக கூறியிருக்கிறார்கள். மாஸ்டர் மகேந்திரன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் ஆரத்தி பொடி, காவ்யா அறிவுமணி, ஶ்ரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு திவாரகா தியாகராஜன் இசையமைக்க, தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மகேன் வேல் படத்தொகுப்பு செய்திருக்கிறார். வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘ரிப்பப்பரி’ திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.