ஹனு​மா​னாக ரிஷப் ஷெட்​டி நடிக்​கும் புதிய படம் -என்ன டைட்டில் தெரியுமா ?

Kanthara

 தேஜா சஜ்ஜா நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ஹனு​மான்’ என்ற பான் இந்தியா படத்தை இயக்​கியிருந்த பிர​சாந்த் வர்​மா, தற்போது ‘ஜெய் ஹனு​மான்’ என்ற படத்தை இயக்​கு​கிறார். பிர​சாந்த் வர்மா சினி​மாடிக் யுனிவர்ஸின் ஒரு பகு​தி​யான இதை மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரிக்​கிறது. டி-சீரிஸ் இணைந்து தயாரிக்கிறது. ஹனு​மா​னாக ரிஷப் ஷெட்​டி நடிக்​கிறார். தெலுங்​கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உரு​வாகும் இதில், அஸ்​வத்​தா​மா​வாக ராணா நடிக்க இருப்​ப​தாக கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில், இந்தி நடிகை வாமிகா கபி முக்​கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். செல்வராகவன் திரைக்கதையில் கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கிய ‘மாலை நேரத்து மயக்கம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான வாமிகா கப்பி, தற்போது ‘டிசி’ படத்தின் மூலம் தமிழ் படவுலகில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

‘ஜூபிளி’ என்ற வெப்தொடரில் அவர் ஏற்றிருந்த நிலோஃபர் குரேஷி என்ற கதாபாத்திரம், இந்திய அளவில் மிகப்பெரிய பாராட்டை பெற்றிருந்தது. தமிழில் அமேசான் பிரைமில் வெளியான ‘மாடர்ன் லவ்’ என்ற வெப்தொடரில், தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘நினைவோ ஒரு பறவை’ என்ற எபிசோடில் வித்தியாசமான நடிப்பை வழங்கியிருந்தார்..

Share this story