ரிஷப் ஷெட்டி இல்லை...'காந்தாரா'வில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்...!

Kanthara

தற்போது காந்தாரா: சாப்டர் 1 உருவாகி வருகிறது. கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெய்வமாக வணங்கும் பஞ்சுருளி என்ற காவல் தெய்வத்தை மையமாக வைத்து உருவான படம் காந்தாரா. இப்படத்தை ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கி இருந்தார். கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்திருந்தனர்.ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. ரூ.16 கோடி செலவில் தயாராகி ரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதில் ரிஷப் ஷெட்டி ஏற்று நடித்த பஞ்சுருளி தெய்வ கதாபாத்திரம், மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

Punith rajkumar

இந்நிலையில், ரிஷப் ஷெட்டிக்கு முன் இப்படத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நடிக்க இருந்திருக்கிறார். இதனை இப்படத்தின் இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டியே கூறி இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், 'நான் அவரிடம் கதையைச் சொன்னவுடன், உற்சாகமாகவும் ஆர்வமாகவும் இருந்தார். ஆனால், அவரது வரிசையில் இருந்த மற்ற படங்கள் அவரை 'கந்தாரா'விலிருந்து விலக்கி வைத்தன. ஒரு நாள், அவர் என்னை செல்போனில் அழைத்து, அவர் இல்லாமல்  படத்தைத் தொடரச் சொன்னார். நான் அவருக்காக காத்திருந்தால் அந்த வருடம் என்னால் படம் செய்ய முடியாமல் போகலாம் என்று அவர் என்னிடம் கூறினார்,'என்றார். தற்போது, இப்படத்தின் அடுத்த பாகம் உருவாகி வருகிறது. இதற்கு காந்தாரா: சாப்டர் 1 என பெயரிடப்பட்டுள்ளது.

Share this story