ரிஷப் ஷெட்டி நடிக்கும் சத்ரபதி சிவாஜி பயோபிக் முதல் தோற்றம் வெளியீடு !

rishabh shetty

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் புதிய படத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டி நடிக்கிறார். இது தொடர்பான முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடிக்கும் ‘காந்தாரா 2’ அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. இதனிடையே அவர் ‘ஹனுமான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து ரிஷப் ஷெட்டி நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘Chhatrapati Shivaji Maharaj’ என தலைப்பிடப்பட்டுள்ளது. 



 
இந்தப் படத்தை சந்தீப் சிங் இயக்குகிறார். படம் 2027-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள முதல் தோற்ற போஸ்டரில், அரசர் கால உடை மற்றும் நீண்ட வாளுடன் காட்சியளிக்கிறார் ரிஷப் ஷெட்டி. காவி வண்ணம் பரவிய போஸ்டரில் இந்தியில் சில குறிப்புகள் மங்கிய நிலையில் காணப்படுகின்றன.

போஸ்டரை பகிர்ந்துள்ள ரிஷப் ஷெட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது வெறும் படமல்ல. அனைத்து முரண்களுக்கும் எதிராக போராடிய ஒரு போர் வீரரின் முழக்கம். வலிமை மிக்க முகலாய பேரரசின் வலிமைக்கு சவால் விடுத்தவர். ஒருபோதும் மறக்க முடியாத பாரம்பரியத்தை உருவாக்கியவர் சத்ரபதி சிவாஜி மகாராஜ்” எனப் பதிவிட்டுள்ளார்.

Share this story