யஷ்ஷை கடுமையாக சாடியுள்ள பிரபல நடிகை -எதனால் தெரியுமா ?
கன்னட முன்னணி ஹீரோ யஷ் நடிப்பில், மலையாள நடிகை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள பான்வேர்ல்ட் படம், ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’. இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், தாரா சுதாரியா, ஹுமா குரேஷி நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலரில் இடம்பெற்றுள்ள சில ஆபாச காட்சிகள் மற்றும் பெண்களை சித்தரித்துள்ள விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள கன்னட நடிகை ரிஷிகா சிங், யஷ்ஷை கடுமையாக சாடியுள்ளார். அதில் அவர், ‘ஆடைகளை கழற்றி இப்படி நிர்வாணமாக நிற்க வேண்டிய அவசியம் என்ன? வீட்டில் மனைவி காத்திருக்கும்போது, மற்ற நடிகைகளுடன் இவ்வளவு நெருக்கம் தேவையா? பெண்களை இழிவாக சித்தரிப்பதை நிறுத்தாவிட்டால், உங்களை கர்நாடகாவை விட்டே வெளியேற வைப்போம்’ என்று கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘பாலிவுட்டில் இருந்து அழைக்கப்பட்ட கியாரா அத்வானியை படத்தில் தவறாக சித்தரித்துள்ளனர். பெண் ஒருவரின் விலை என்னவென்று கேட்கும் வசனம் அருவெறுக்கத்தக்க வகையில் இருக்கிறது. எனது விமர்சனம், இயக்குனர் கீது மோகன்தாசுக்கு எதிரானது அல்ல’ என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

